நடிகர் சிம்புவுக்கும், தயாரிப்பாளருக்கும் இடையேயான பிரச்சனை சமரசமானதையடுத்து தற்போது சிம்பு புதிய எனெர்ஜியுடன் கம் பேக் கொடுத்துள்ளார்.

சர்ச்சை நடிகர் சிம்பு

தமிழில் அதிகம் பேசப்படும் நடிகர்களில் சிம்புவும் ஒருவர். இயக்குநரும், நடிகருமான டி. ராஜேந்தரின் மகனான சிம்பு முதலில் நயன்தாராவை காதலித்ததாக கூறப்பட்டது. அந்த காதல் தோல்வியில் முடிந்ததையடுத்து நடிகை ஹன்சிகாவை காதலித்ததாக கிசுகிசுக்கப்பட்டது. அந்த காதலும் கைகூடாததால், சிம்புக்கு வீட்டில் பெண் பார்க்கத் துவங்கினர். சமீபத்தில் லண்டனைச் சேர்ந்த பெண் ஒருவரை சிம்பு திருமணம் செய்துகொள்ள உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் இதனை சிம்பு குடும்பத்தினர் திட்டவட்டமாக மறுத்தனர்.

படப்பிடிப்பு நிறுத்தம்

சினிமாவில் முழு கவனம் செலுத்தி வரும் நடிகர் சிம்பு, வந்தா ராஜாவாதான் வருவேன் படத்திற்கு பிறகு கன்னட படமான முஃப்தி ரீமேக்கில் நடிக்க ஒப்பந்தமானார். ஞானவேல்ராஜா தயாரிக்கும் அந்தப் படத்தில் சிம்பு – கவுதம் கார்த்திக் இணைந்து நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. படப்பிடிப்பு துவங்கிய நிலையில், சிம்பு – ஞானவேல் ராஜா இடையே மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளது. இதனால் முஃப்தி படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதையடுத்து ஹன்சிகாவுடன் மஹா படத்திலும், வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்திலும் சிம்பு நடித்து வந்தார்.

சமரசம்

இந்தநிலையில், தற்போது முஃப்தி பட ரீமேக்கை மீண்டும் துவங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் சிம்புவுக்கும், ஞானவேல் ராஜாவுக்கும் இடையே சமரசம் ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா ஊரடங்கு முடிந்து நிலைமை சீரான பிறகு படப்பிடிப்பு துவங்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. லண்டன் சென்று எடைக் குறைப்பு சிகிச்சையை மேற்கொண்டு மீண்டும் படங்களில் கவனம் செலுத்தி வரும் சிம்புவிற்கு அடுக்கடுக்காக பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் தேடி வந்த வண்ணம் உள்ளது. அந்தவகையில், இப்போது இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும், ‘மாநாடு’ படத்தில் கவனம் செலுத்தும் சிம்பு, அடுத்ததாக இயக்குநர் ஹரி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

ஹரியுடன் சிம்பு

ஏற்கனவே சிம்பு, இயக்குனர் கூட்டணியில் 2003ம் ஆண்டு வெளியான கோவில் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதைதொடர்ந்து 16 வருடங்களுக்கு பின் மீண்டும் அவர்களது கூட்டணியில் புதிய படம் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். சமீப காலமாக இயக்குனர் ஹரி பார்ட் 2, பார்ட் 3 திரைப்படங்களை இயக்கி வந்த நிலையில், தற்போது முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில், சிம்புவை வைத்து படம் இயக்க உள்ளதாக கூறப்படுகிது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here