”’தி பேரனார்மல் கம்பணி’ தொடங்கப்பட்ட 2 மாதத்திற்குள் இந்தியாவில் நாடுதழுவிய ஊரடங்கு அமலுக்கு வந்துவிட்டது. எல்லா தொழில்களும் முடங்கியுள்ளபோதும் எங்களுக்கு எப்போதும் இல்லாத அளவிற்கு அழைப்புகள் வந்தவண்ணம் இருக்கின்றன”என்கிறார் நடிகரும், நிறுவனருமான ஜே அலாணி.

லாக்டவுன் பரிதாபங்கள்

மூன்று நான்கு மாதங்களுக்குமுன் நான் நிறுவனத்தைத் தொடங்கியபொழுது ஒரு நாளைக்கு 2-3 ஃபோன் கால்கள்தான் வரும். ஆனால் பலர் வீட்டுக்குள் முடங்கியும், தனிமையிலும் இருக்கும் இந்த ஊரடங்கு காலத்தில் எங்களுக்கு சராசரியாக 8-10 அழைப்புகள் வந்துவிடுகின்றன.

பேய்கள், ஆவிகள், மந்திரம், மாந்திரீகம் சார்ந்த தீவிர ஆர்வம் கொண்டவர்கள் இந்த ஊரடங்கு காலத்தில் திகில் கிளப்பும் பல மர்ம நாவல்களைப் படிப்பதும், படங்களைப் பார்ப்பதும், தொடர்களைத் தேடிப் பிடிப்பதுமாய் வீட்டிலிருந்தபடி பொழுதைக் கழித்து வருவதால் இதுபோன்ற உளவியல் சிக்கலுக்கு ஆளாகிறார்கள் என்று கருதப்படுகிறது.

ஆவிகளின் ஐ.பி அட்ரஸ்

பேய்கள் நடமாட்டத்தை உணர்வதாக இதுவரை நூற்றிற்கும் மேற்பட்ட புகார்களைச் சந்தித்துள்ளார் அலாணி. அதில் விசித்திரம் என்னவென்றால் அதிகமான அழைப்புகள் மஹாராஷ்ட்ரா, உத்திர பிரதேசம், டெல்லி மற்றும் வங்கத்திலிருந்துதான் வந்திருக்கின்றன என்பது அவரது கணிப்பு.

”எங்களது வேலை நேரம் பகல் 8 மணி-இரவு 8 மணி. வரும் நாட்களில் 24 மணி நேர சேவை மையமாக இதை மாற்றும் எண்ணம் உள்ளது. அதுவரை அலுவல் நேரம் தவிர்த்து மக்கள் மிஸ்ட் கால் அல்லது வாட்ஸப் செய்தியை மேற்கண்ட எண்ணுக்கு அனுப்பலாம். அல்லது haunt@jayalani.comக்கு  மின்னஞ்சல் அனுப்பலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here