தேவையானவை
பாசுமதி அரிசி – 1 1/2 டம்ளர்
சீரகம் – சிறிதளவு
மல்லித்தழை – சிறிதளவு
உப்பு – சிறிதளவு
எண்ணெய் அல்லது நெய் – சிறிதளவு
செய்முறை
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து பின் அரிசியை போடவும். அதனுடன் உப்பு மற்றும் ஒரு சிட்டிகை நெய் சேர்க்கவும். பின் 3/4 பங்கு வெந்த பிறகு வடிகட்டி தட்டில் மெதுவாக கொட்டிவிட்டு நன்றாக சூடு போகும்வரை ஆறவிட வேண்டும். அதன்பின் சீரகத்தை நன்றாக பொரியவிட்டு பிறகு எண்ணெய் அல்லது நெய்யில் ஆறவைத்த சாதத்தை கொட்டி விடவும். அதன் தொடர்ச்சியாக சிறிதாக நறுக்கிய மல்லித்தழையை சேர்த்து மெதுவாக சாதத்தை கிளறி, சில நிமிடங்கள் கழித்து உண்டால் சுவையான ஜீரா ரைஸ் தயார்.
சீரகத்தின் நன்மைகள்
வயிற்று வலிக்கு சீரகம் சிறந்த மருந்து. செரிமான பிரச்சனை ஏற்பட்டால் சூடான நீரில் சிறிதளவு சீரகத்தை சேர்த்து குடித்துவர செரிமான பிரச்சனை தீரும். தொண்டையில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு சிறிதளவு சீரகத்தை மென்று தின்றுவர தொண்டை பிரச்சனை தீரும். வெறும் வயிற்றில் சீரகத் தண்ணீர் அருந்துவதால் உள்ளுறுப்புகள் நன்றாக இயங்கும்.