தேவையானவை
ராகி மாவு : 2 டம்ளர்
பெரிய வெங்காயம் : 2
பச்சை மிளகாய் : 3
சீரகம், கொத்தமல்லி (ம) கருவேப்பிலை சிறிதளவு
முருங்கைக்கீரை சிறிதளவு
தேங்காய் சிறிதளவு
உப்பு மற்றும் எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
வாணலியில் ராகியை நன்றாக வறுத்து பின் மிக்ஸியில் போட்டு அரைத்து எடுக்கவும். அதன்பின் நீளமாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், சீரகம், கொத்தமல்லி, கருவேப்பிலை, முருங்கை கீரை, தேங்காய் இவை அனைத்துடன் தண்ணீரையும் சிறிதளவு சேர்த்து ராகி மாவுடன் பிசைந்து கொள்ள வேண்டும். மாவு சற்று ஊறிய நிலையில் அதனை தோசைக்கல்லில் தட்டிப்போட்டு எடுத்தால் சூடான சுவையான ராகி ரொட்டி தயார்.
ராகியின் நன்மைகள்
ராகி குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான உணவு. உடல் எடையை குறைக்க பயன்படுவதோடு, சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற சிறந்த உணவாகும். நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் வல்லமை கொண்ட ராகி, பற்கள் மற்றும் எலும்புகளுக்கு பலம் சேர்க்கக் கூடியது.