நாளை மாலை 5 மணிக்கு இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் லைவ்வில் உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் கலந்துரையாடும் லைவ் நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.

சமூகவலைதளங்களில் பிரபலங்கள்

கொரோனா ஊரடங்கு காலத்தில் சினிமா பிரபலங்கள் என்னென்ன செய்கிறார்கள், அவர்களின் கொரோனா காலம் எப்படி செல்கிறது என்பது குறித்த மக்களின் கவனம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதற்கு ஏற்றார்போல் செலிபிரிட்டிகளும் தங்களது போட்டோ மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்த வண்ணம் உள்ளனர்.

இன்ஸ்டாகிராம் லைவ்

இதிலிருந்து சற்று வித்தியாசமாக சிறிது நாட்களுக்கு முன் ஒரு லைவ் நிகழ்ச்சி சமூகவலைத்தளத்தில் ஒருங்கிணைக்கப்பட்டது. ‘தலைவன் இருக்கின்றான்’ என்ற டைட்டிலில் ஒருங்கிணைக்கப்பட்ட இன்ஸ்டாகிராம் லைவ் நிகழ்ச்சியில், விஜய்சேதுபதி கேட்ட கேள்விகளுக்கெல்லாம் நடிகர் கமல்ஹாசன் பதில் அளித்தார். இந்த நிகழ்ச்சி இணையத்தில் பயங்கர ஹிட்டானது. ரசிகர்கள் பலரும் பெரும் மகிழ்ச்சிக்கு உள்ளாகினர்.

கமல் – ஏ.ஆர். ரஹ்மான்

இந்நிலையில், இதன் அடுத்த முயற்சியாக இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் கமல் ஆகியோர் கலந்துகொள்ளும் லைவ் பேட்டி இந்த முறை இன்ஸ்டாகிராம் மட்டுமின்றி டுவிட்டர் மற்றும் பேஸ்புக்கிலும் நடைபெற உள்ளதாக தகவல் வந்துள்ளது. ஜூன் 11-ஆம் தேதியான நாளை மாலை 5 மணிக்கு, இன்ஸ்டாகிராம் லைவ்வில் உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் கலந்துரையாடும் லைவ் நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. டர்மெரிக் மீடியா, ராஜ்கமல் நிறுவனம் இணைந்து இந்த நிகழ்ச்சியை வழங்குகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here