FIR திரைப்படத்தில் தான் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாகவும், இப்படம் மூலம் தமிழில் தனக்கு ஒரு கம்பேக் கிடைக்கும் எனவும் நடிகை மஞ்சிமா மோகன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இளம் நடிகை

‘ஒரு வடக்கன் செல்ஃபி’ எனும் மலையாளப் படம் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் மஞ்சிமா மோகன். ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இதற்கடுத்து ‘சத்ரியன்’, ‘தேவராட்டம்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

FIR

அறிமுக இயக்குநர் மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் ஹீரோவாக நடிக்கும் ‘FIR’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் மஞ்சிமா. இயக்குநர் மனு ஆனந்த், கௌதம் மேனனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர். இவர் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் பணிபுரிந்தபோது மஞ்சிமா மோகனின் நட்பு கிடைத்துள்ளது. கதைக்கு மிகவும் பொருத்தமாக இருப்பதினாலும், ஏற்கனவே ஏற்பட்ட பழக்கத்தினாலும் மஞ்சிமாவை தனது முதல் படத்தின் கதாநாயகியாக நடிக்க வைத்திருக்கிறார் மனு.

இஸ்லாமிய பெண்ணாக ரைசா

இப்படத்தில் பிக்பாஸ் புகழ் ரைசா வில்சன் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவருக்கு இப்படத்தில் ஒரு முஸ்லிம் பெண் கதாபாத்திரம் என்று சமீபத்திய விழாவில் ரைசா கூறியிருந்தார். அவ்விழாவில் படத்தின் இயக்குநரையும், விஷ்ணு விஷாலின் நடிப்பு திறனையும் வெகுவாக பாராட்டி இருந்தார் ரைசா.

தமிழில் கம்பேக் கிடைக்குமா?

மஞ்சிமா மோகன் இதுவரை தமிழில் நடித்த கதாபாத்திரத்திலிருந்து இப்படம் சற்று வித்தியாசப்பட்டது என தெரிவித்துள்ளார். இப்படத்தில் இவருக்கு மிகவும் போல்டான கதாபாத்திரம் என்று கூறியுள்ளார். இதுவரை தமிழில் இம்மாதிரியான கதாபாத்திரங்களில் நடித்ததில்லை எனவும், படம் ரிலீசான பிறகு இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கு ஒரு கம்-பேக் கிடைக்கும் எனவும் மஞ்சிமா நம்பிக்கை தெரிவித்துள்ளார். மஞ்சிமா மோகன் தமிழில் விஜய்சேதுபதியின் ‘துக்ளக் தர்பார்’ படத்திலும், இயக்குநர் ராஜசேகர் இயக்கத்தில் ஜீவா, அருள்நிதி, பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகி வரும் ‘களத்தில் சந்திப்போம்’ படத்திலும் நாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here