நான்கு முன்னணி ஹீரோயின்கள் இணைந்து வெளியிட்ட கீர்த்தி சுரேஷின் ‘பென்குயின்’ பட டீசர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
ரசிகர்களிடம் வரவேற்பு
‘நடிகையர் திலகம்’ படத்துக்குப் பிறகு கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படங்களில் அதிக எதிர்பார்ப்புடன் இருக்கும் திரைப்படம் ‘பென்குயின்’. இப்படத்தின் டீசர் இன்று அமேசான் பிரைம் வீடியோ யூடியூபில் வெளியிடப்பட்டு, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
டீசர் வெளியீடு
‘பென்குயின்’ டீசரை 4 முன்னணி ஹீரோயின்கள் தங்களது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். சக நடிகைகளை போட்டியாக பார்க்காமல் மற்ற ஹீரோயின்கள் டீசரை வெளியிட்ட விதம், அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. சமந்தா, டாப்சி, திரிஷா, மஞ்சுவாரியர் ஆகிய நால்வராலும் இந்த டீசர் வெளியிடப்பட்டது. தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என மூன்று மொழிகளில் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.
மர்மக் கதை?
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். அறிமுக இயக்குநர் ஈஷ்வர் கார்த்திக் இதனை இயக்கியுள்ளார். ‘பொன்மகள் வந்தாள்’ படத்தைத் தொடர்ந்து இந்த படமும் OTT தளத்தில் வரும் ஜூன் 19-ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் டீசரை பார்க்கும் பொழுது திகில் நிறைந்த மர்ம கதையாக ‘பென்குயின்’ இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.