தேவையானவை:
அவரைக்காய் : 1/4 kg
பெரிய வெங்காயம் : 50 கிராம்
மிளகாய் வற்றல் : 2
வெள்ளைப் பூண்டு : 2
தேங்காய்ப்பூ : சிறிதளவு
மஞ்சள் தூள் & உப்பு : தேவையான அளவு
செய்முறை:
முதலில் நாம் எப்போதும் தாளிப்பது போல் வாணலியில் இரண்டு அல்லது மூன்று ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி கடுகு, வெள்ளை உளுத்தம்பருப்பு, சீரகம், சிறிதளவு கடலை பருப்பு மற்றும் கருவேப்பிலை போட்டு தாளிக்கவும். பின்னர் நீளமாக நறுக்கிய வெங்காயம், மிளகாய் வற்றல், வெள்ளைப்பூண்டு, தேவையான அளவு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்க்கவும். அவைகளுடன் நீளமாக நறுக்கி வைத்த அவரைக்காயை சேர்த்து இரண்டு நிமிடம் நன்கு வதக்கவும். அதன்பின் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூன்று நிமிடம் அடுப்பை சிம்மில் வைத்து மூடி வைக்கவும். நன்கு வெந்தவுடன் தேங்காய் பூவை அதில் போட்டு இறக்கவும். ஐந்தே நிமிடத்தில் சுவையான, அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஊட்டச்சத்து மிகுந்த அவரைக்காய் பொரியல் ரெடி.
அவரைக்காயின் நன்மைகள்:
அவரைக்காயில் இரும்புச் சத்து, நார்ச் சத்து மற்றும் ஊட்டச் சத்து போன்றவை அதிகம் இருப்பதால் மலச்சிக்கல், மன அழுத்தம், இருதய நோய், சுவாசப் பிரச்சினை போன்றவற்றை கட்டுப்படுத்துகிறது. கால்சியம் அதிகம் இருப்பதால் எலும்புகள், பற்கள் உறுதியாக இருக்க உதவுகிறது. இதுபோன்ற பல சத்துக்களை கொண்ட அவரைக்காயை உணவில் தினமும் அதிகம் சேர்த்து சாப்பிட்டு வந்தால், தேவையற்ற கொழுப்புகளை கரைக்கவும், உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.