விஜய் சேதுபதியின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படத்தின் முக்கிய அப்டேட்டை நடிகை கனிகா வெளியிட்டுள்ளார். 
சிறந்த நடிகை
5 ஸ்டார் திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை கனிகா. அதன்பிறகு சேரனுடன் ஆட்டோகிராப், அஜித்துடன் வரலாறு, மலையாளத்தில் மம்முட்டியுடன் பழசிராஜா போன்ற படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமின்றி மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளிலும் கதைக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களிலும் நடித்து வந்தார். 
விஜய்சேதுபதி படத்தில் கனிகா
மலையாளத்தில் அதிக கவனம் செலுத்தி வந்த கனிகா, தற்போது விஜய் சேதுபதி நடிக்கும் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படம் மூலம் ரீ-என்ட்ரி ஆகிறார். ‘லாபம்’ பட இயக்குநர் ஜனநாதனின் உதவி இயக்குநர் வெங்கட கிருஷ்ணா இயக்கும் இப்படத்தில், நடிகர் விவேக், இயக்குநர்கள் மோகன் ராஜா, மகிழ்திருமேனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
புதிய அப்டேட்
இந்நிலையில், ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படத்தின் முக்கிய அப்டேட்டை நடிகை கனிகா வெளியிட்டுள்ளார். அதன்படி யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கி இருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த படத்தில் டப்பிங் பேசியது ஸ்பெஷலான அனுபவம். ஏனெனில் இதில் இலங்கை தமிழ் பேசியுள்ளேன் என கனிகா குறிப்பிட்டுள்ளார்.















































