கங்கனா ரனாவத் நடிப்பில் உருவான ‘தலைவி’ திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமம் ரூ.55 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில், அப்படம் OTT தளத்தில் ரிலீஸ் செய்யப்படுகிறதா என்பது குறித்து கங்கனா விளக்கம் அளித்துள்ளார்.
‘தலைவி’
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி ‘தலைவி’ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. ஏ.எல். விஜய் இயக்கும் இப்படத்தில் ஜெயலலிதாவாக கங்கனா ரனாவத்தும், எம்.ஜி.ஆராக அரவிந்த்சாமியும், கருணாநிதியாக பிரகாஷ் ராஜூம் நடித்துள்ளனர்.
டிஜிட்டல் உரிமம்
தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகும் ‘தலைவி’ படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் தமிழ் மற்றும் இந்தி ஆகிய இரு மொழிகளுக்கான டிஜிட்டல் உரிமத்தை அமேசான் மற்றும் நெட்பிளிக்ஸ் ஆகிய நிறுவனங்களிடம் ரூ.55 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.
OTTயில் ரிலீஸா?
இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது; ‘தலைவி’ திரைப்படம் முதலில் தியேட்டரில் தான் ரிலீசாகும். தலைவி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம், அதனை தியேட்டரில் ரிலீஸ் செய்தால் தான் சரியாக இருக்கும் எனக் கூறியுள்ளார்.