கோலிவுட் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொள்ளப் போவதாக இணையதளங்களில் வெளியான தகவல் கோடம்பாக்கத்தில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.

நயன்தாரா, பிரபுதேவா காதல்

நடிகை நயன்தாரா தமிழ் திரையுலகை சேர்ந்த சிம்பு, பிரபுதேவா ஆகிய இருவருடனும் சேர்த்து வைத்து கிசுகிசுக்கப்பட்டார். பிரபுதேவா மீதிருந்த அளவு கடந்த அன்பினால் அவருடைய பெயரை தன்னுடைய கையில் பச்சை குத்தி கொண்டார் நயன்தாரா. மேலும், இவர் மதம் மாறி பிரபுதேவாவை திருமணம் செய்து கொண்டதாகவும் சில தகவல்கள் வெளியாகின. பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தது நாம் அனைவருமே அறிந்ததுதான்.

விக்னேஷ் சிவன் என்ட்ரி

தற்போது, இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் கடந்த 5 வருடத்திற்கு மேலாக நயன்தாரா ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறார். நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமணத்தை கோலிவுட் வட்டாரம் பெரிதும் எதிர்பார்த்த நிலையில் உள்ளது. ரசிகர்கள் அவ்வபோது இவர்கள் திருமணம் குறித்த உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் ஏதேனும் கிடைத்தால்கூட அதை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து பெரிதாக்கிவிடுவார்கள். அந்த செய்திகளுக்கு இருவர் தரப்பிலிருந்தும் மறுப்பு வருவது வழக்கமான ஒன்றாகிவிட்டது.

திருமணம்?

இந்த நிலையில் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக இணையதளங்களில் தகவல் பரவி வருகிறது. ஊரடங்கில் முழுமையாக தளர்வு ஏற்பட்டதும் இருவரும் திருமணம் செய்துள்ள முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளிவருகிறது. நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களை மட்டும் வைத்து கோவிலில் எளிமையான முறையில் இவர்கள் திருமணம் நடக்கவிருக்கிறது என்று செய்தி பரப்பப்படுகிறது. எப்போதும்போல் இது வெறும் செய்தியாக மட்டுமே முடிந்துவிடாமல், கல்யாணம் கட்டாயம் நடந்தே தீரும் என்று ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.

ஊரடங்குக்குப் பின் பிஸி

நயன்தாரா தற்போது ‘மூக்குத்தி அம்மன்’, ‘நெற்றிக்கண்’, ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ ஆகிய படங்களில் ஒப்பந்தமாகியிருக்கிறார். ஊரடங்கு முடிந்தபின் இப்படங்களின் ஷூட்டிங் முழுவீச்சில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ‘நெற்றிக்கண்’ படத்துக்கு விக்னேஷ் சிவன் தயாரிப்பாளராகவும், ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்துக்கு இயக்குநராகவும் இருக்கிறார் என்பது குறிப்படத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here