கோவா மாநிலம் உருவான தினம்
மே மாதம் 30 ம் தேதி கோவா மாநிலம் உருவான தினம் கொண்டாடப்படுகிறது. 1987 ஆம் ஆண்டில் கோவா இந்திய யூனியனின் 25 வது மாநிலமாக இணைந்தது. இதற்கு முன்னர் கோவா, டாமன் மற்றும் தியூவுடன் இணைந்து ஒரு யூனியன் பிரதேசமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
நிகழ்வுகள்
1912 – ஆகாய விமானத்தை கண்டுபிடித்த ரைட் சகோதரர்களுள் ஒருவரான வில்பர்ட் இறந்தார்.
1919 – ஜாலியன் வாலாபாக் படுகொலையை கண்டிக்கும் வகையில் பிரிட்டிஷ்அரசு அளித்த ‘ஸர்’ பட்டத்தை தாகூர் திரும்பக் கொடுத்தார்.
1966 – முன்னாள் கொங்கோ பிரதமர் எவரீஸ்டே கிம்பா மற்றும் பல அரசியல் தலைவர்கள் பகிரங்கமாகத் தூக்கிலிடப்பட்டார்கள்.
1987 – இந்தியாவின் 25வது மாநிலமாக கோவா உருவாகியது.
1998 – வடக்கு ஆப்கானிஸ்தானில் 6.6 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தில் 5,000 பேர் வரை உயிரிழந்தனர்.