தற்போதுள்ள சூழலில் பள்ளிகளை திறப்பதில் தாமதம் ஏற்படும் என்றும் பாடங்கள் குறைப்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் எனவும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

பள்ளிகள் மூடல்!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளி, கல்லூரிகள் தற்போது வரை திறக்கப்படவில்லை. கொரோனா குறித்த அச்சம் மக்களிடையே நிலவி வருவதால், பள்ளிகளை திறப்பதற்கான கால நேரம் இன்னும் முடிவு செய்யப்படாமல் உள்ளது.

ஆலோசித்து முடிவு

இந்த நிலையில், தற்போதைக்கு பள்ளிகளை திறக்க வாய்ப்பு இல்லை என பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பள்ளிகள் திறப்பு தாமதமாவதால், பாடங்கள் குறைப்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றார். இதற்காக 16 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த குழுவின் ஆலோசனைக்கு பிறகு முதல்வருடன் பேசி பாடங்கள் குறைப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

தேர்வு முடிவு!

பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியாகும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here