பிரபல இயக்குனர் ஏ.எல். விஜய் – ஐஸ்வர்யா தம்பதியருக்கு இன்று அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.

திருமணம், விவகாரத்து

இயக்குநர் விஜய்யின் தலைவா, தெய்வத்திருமகள் திரைப்படங்களில் நடிகை அமலா பால் நடித்திருந்தார். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. பின்னர் கடந்த 2014ம் ஆண்டு ஜூன் மாதம் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, 2017ம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றனர்.

2வது திருமணம்

பின்னர் தன்னுடைய முழு கவனத்தையும் திரைப்படங்கள் இயக்குவதில் செலுத்தி வந்த விஜய்க்கு, டாக்டர் ஐஸ்வர்யா என்பவரை திருமணம் செய்து வைக்க அவரது பெற்றொர் முடிவு செய்தனர். சென்னை மண்ணிவாக்கத்தை சேர்ந்த ராஜன்பாபு – அனிதா தம்பதியரின் மகளான டாக்டர் ஐஸ்வர்யாவுக்கும், இயக்குனர் விஜய்க்கும் கடந்த ஆண்டு ஜூலை மாதம் திருமணம் நடைபெற்றது.

ஆண் குழந்தை

இந்நிலையில், இயக்குநர் விஜய் – டாக்டர் ஐஸ்வர்யா தம்பதியினருக்கு சென்னையில் இன்று அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளனர்.

‘தலைவி’

இயக்குநர் ஏ.எல். விஜய் தற்போது ஜெயலலிதாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு ‘தலைவி’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரனாவத் நடித்து வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here