கேரளாவில் ஜூன் 1-ந் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
தென்மேற்கு பருவமழை
தென்கிழக்கு அரபிக்கடலில் வருகின்ற 31-ந் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதால் கேரளா மற்றும் தென் இந்தியாவில் தென்மேற்கு பருவமழை ஜூன் 1-ந் தேதி தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மாலத்தீவிலும் பருவமழை
அதேசமயம் கேரளாவைத் தொடர்ந்து மாலத்தீவுகள் உள்ளிட்ட சில பகுதிகளிலும் தென்மேற்கு பருவமழை தொடங்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை
ஏற்கனவே மத்திய மேற்கு அரபிக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி ஏமனை நோக்கி நகரும் என்பதால், மத்திய கிழக்கு மற்றும் வடமேற்கு தென்கிழக்கு அரபிக் கடலுக்கு மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.















































