இயற்கையின் கோபத்தில் இருந்து கடவுள் தான் நம்மை காப்பாற்ற வேண்டுமென பிரபல நடிகை ராய் லட்சுமி வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
ராய் லட்சுமி
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ராய் லட்சுமி. தனது திறமையான நடிப்பாலும், கவர்ச்சியாலும் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை வைத்துளார் அவர்.
இயற்கையின் கோபம்
இந்த நிலையில் நடிகை ராய் லட்சுமி புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவி செய்து அவர்களைக் காப்பாற்றுவோம் என்று கூறியுள்ளார். இதுதொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர், இயற்கையின் கோபம். கடவுள்தான் உலகைக் காப்பாற்ற வேண்டும். இனி இதையெல்லாம் பார்க்க முடியாது.
நல்ல காலம் பிறக்கும்
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவி செய்து அவர்களைக் காப்பாற்றுவோம். இந்தக் கடுமையான காலமும் நம்மைவிட்டுக் கடந்து போகும். விரைவில் நல்ல காலம் பிறக்கும் என்று நம்புவோம்” என்று வருத்தத்துடன் கூறியிருக்கிறார்.