கள்ளக்காதலை படமாக்கியதாக கூறி சிலர் தனது குறும்படத்தை எதிர்ப்பதாக இயக்குனர் கெளதம் மேனன் தெரிவித்துள்ளார்.

‘கார்த்திக் டயல் செய்த எண்’

கொரோனா ஊரடங்கு காலத்தில் இயக்குனர் கெளதம் மேனன் ‘கார்த்திக் டயல் செய்த எண்’ என்ற குறும்படத்தை இயக்கி வெளியிட்டார். இதில் சிம்புவும் திரிஷாவும் வீட்டில் இருந்தே நடித்துள்ளனர். 2010ல் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகத்தின் ஒரு பகுதியாக தான் இந்த குறும்படத்தை உருவாக்கியதாக கெளதம் மேனன் கூறியிருந்தார்.

கடும் கண்டனம்

‘கார்த்திக் டயல் செய்த எண்’ குறும்படத்தில் திருமணமாகி குழந்தைகளுடன் இருக்கும் தனது பழைய காதலி திரிஷாவிடம் போனில் பேசும் சிம்பு இப்போதும் உன்னை காதலிக்கிறேன் என்று சொல்வதுபோன்ற வசனம் உள்ளது. இதற்கு சமூக வலைத்தளத்தில் எதிர்ப்பு கிளம்பியது. கள்ளக்காதலை ஊக்குவிப்பதுபோல் குறும்படத்தை எடுத்து இருப்பதாகவும், இளைஞர்கள் மனதில் விஷத்தை கலக்க வேண்டாம் என்றும் கூறி பலரும் கெளதம் மேனனுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

அது ஒரு காட்சிதான்

இந்த சர்ச்சைகளுக்கு இயக்குனர் கெளதம் மேனன் விளக்கமளித்துள்ளார். அவர் கூறுகையில், நீங்களும் உங்கள் முன்னாள் காதலியை அழைத்து பேசுங்கள் என்று சொல்வதற்காக இந்த படத்தை நான் எடுக்கவில்லை. இது ஜெஸ்ஸி, கார்த்திக்கின் கதை. நான் எழுதிக்கொண்டிருக்கும் திரைக்கதையில் உள்ள ஒரு காட்சிதான் இது. பார்ப்பவர்களுக்கு அது கள்ளக்காதல் போன்று இருந்தாலும் எனக்கு அப்படி தோன்றவில்லை.

வசைபாடுகின்றனர்

எப்போதுமே எனது படங்களுக்கு பிடித்தவர்களும் பிடிக்காதவர்களும் சுமாரான படம் என்று கூறியவர்களும் இருந்து இருக்கிறார்கள். விமர்சனங்களை பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டேன். ஒரு சிலர்தான் படத்தை வசைபாடுகின்றனர் என கெளதம் மேனன் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here