கேரள மாநிலம் மூணாறு வனப்பகுதியில் யானை, சிறுத்தை, காட்டெருமை, மான் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த நிலையில், அங்குள்ள வனப்பகுதியில் இருக்கும் பலா மரம் ஒன்றில், காட்டு யானை பழம் பறிக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. தனது முன்னங்கால்கள் மற்றும் தும்பிக்கை உதவியுடன், அந்த யானை லாவகமாக பாலப்பழத்தை பறித்து உண்கிறது.















































