ஒற்றை மின்கம்பியில், முதல் தந்திச் செய்தி அனுப்பப்பட்ட நாள்
தந்தி என்ற தகவல் தொடர்பு கருவியை மனிதர்கள் இன்று மறந்துவிட்ட நிலையில், சாமுவேல் மோர்ஸ் என்பவர் ஒற்றை மின்கம்பியில் முதல் தந்தி செய்தியை தட்டிவிட்ட நாள் இன்று. ஓவியராக இருந்த சாமுவேல் மோர்ஸ், மின் அலை அதிர்வுகளால் தகவல்களை தாங்கிச் செல்ல முடியும் என்பதை அறிந்து கொண்டார்.
மோர்ஸுக்கு முன்பிருந்த தந்தி கருவி 26 ஒயர்களுடன் இணைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு ஆங்கில எழுத்துக்கும் ஒரு ஒயர் என்ற நிலை. இந்த நிலையில் சாமுவேல் மோர்ஸ் ஒரு ஒயருடன் கூடிய தந்தி கருவியை கண்டுபிடிக்க முடிவு செய்தார்.
1844 ஆம் ஆண்டு அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் இருந்து பால்டிவோ நகரில் உள்ள தனது உதவியாளர் ஆல்பர்ட் ஃபெயிலுக்கு தந்தி செய்தியை அனுப்பினார் மோர்ஸ். இறைவன் என்னென்ன செய்தார் என்ற வாசகம் முதல் தந்தி செய்தியாக அன்று போனது.