தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளி ஒருவர் கோழிக்கறி ஆர்டர் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 13,191 ஆக அதிகரித்துள்ள நிலையில், இதுவரை 5,882 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 557 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோரின் எண்ணிக்கை 8,228 ஆக அதிகரித்துள்ளது.
வேடிக்கை சம்பவம்
கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஒருபுறம் அதிகரித்துக் கொண்டே இருக்க, நோய் தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்கள் பாதியில் தப்பியோடும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. அந்த வரிசையில் சேலம் அரசு மருத்துவமனையில் ஒரு வினோத சம்பவம் நடந்துள்ளது. 
தந்தூரி சிக்கன்
சேலம் அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வரும் 4 பேர், ஆன்லைன் மூலம் தந்தூரி சிக்கன் ஆர்டர் செய்து வரவழைத்துள்ளனர். கொரோனா நோயாளிகள் இவ்வாறு செய்தது மருத்துவர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து அந்த நோயாளிகளுக்கு மருத்துவர்கள் அறிவுரை கூறியுள்ளனர்.















































