முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு நாள்
1991ஆம் தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வந்த ராஜீவ் காந்தி, ஸ்ரீபெரும்புதூரில் நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தார். அவரது நினைவு நாளில் ஒவ்வொரு ஆண்டும் மத்திய – மாநில அரசு அலுவலகங்களில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்கப்படுகிறது.
1944ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20ஆம் நாள் மும்பையில், இந்திரா காந்திக்கும் ஃபெரோஸ் காந்திக்கும் மகனாகப் பிறந்தவர் ராஜீவ் காந்தி. 1984ஆம் ஆண்டிலிருந்து 1989 வரையில் இந்தியாவில் பிரதமராகப் பணியாற்றியவர் ராஜீவ் காந்தி. 1984ஆம் ஆண்டு இந்திரா காந்தியின் படுகொலைக்குப் பின்னர், பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்ட ராஜீவ் காந்தி, இந்தியாவின் மிகவும் இளமையான பிரதமர் என்றப் பெருமையைப் பெற்றவராவார். பாரத ரத்னா விருது மற்றும் இந்திரா காந்தி பரிசைப் பெற்றுள்ளார்.
தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வந்த ராஜீவ் காந்தி, ஸ்ரீபெரும்புதூரில் நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தார். இந்தக் குண்டு வெடிப்பில், ராஜீவ் காந்தி மற்றும் அவரை சுற்றியிருந்த 14 பேர் கொல்லப்பட்டனர். AIIMS மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்குப் பின் அவரது உடல் தகனம் செய்யப்பட்டு, யமுனை ஆற்றில் கரைக்கப்பட்டது.
நிகழ்வுகள்
1851 – கொலம்பியாவில் அடிமைத்தொழில் ஒழிக்கப்பட்டது.
1871 – பிரெஞ்சு அரசுப் படைகள் பாரிஸ் கம்யூனைத் தாக்கினார். ஒரு வார முற்றுகையில் 20,000 கொம்யூன் மக்கள் கொல்லப்பட்டு, 38,000 பேர் கைது செய்யப்பட்டனர்.
1894 – 22 வயது பிரெஞ்சு கொடுங்கோலன் எமிலி ஹென்றி கழுத்து துண்டிக்கப்பட்டு மரண தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டான்.
1904 – பாரிசில் சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (FIFA) ஆரம்பிக்கப்பட்டது.
1917 – அட்லாண்டாவில் இடம்பெற்ற பெருந்தீயில் பெரும் அழிவு ஏற்பட்டது.
1941 – இரண்டாம் உலகப் போர்: பிரேசிலில் இருந்து 950 மைல் தூரத்தில் ரொபின் மூர் என்ற அமெரிக்க போர்க் கப்பல் ஜெர்மனியின் யூ-படகினால் மூழ்கடிக்கப்பட்டது.
1991 – எதியோப்பியாவின் கம்யூனிச அரசுத் தலைவர் மெங்கிஸ்டு ஹைலி மரியாம் நாட்டில் இருந்து தப்பி வெளியேறினார். எதியோப்பிய உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.
1996 – தான்சானியாவில் பூக்கோவா என்ற என்ற பயணிகள் கப்பல் மூழ்கியதில் 1000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
1998 – 32 ஆண்டுகள் இந்தோனேசியாவை ஆண்ட சுகார்ட்டோ பதவி விலகினார்.
2003 – வடக்கு அல்ஜீரியாவில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 2,000 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.
2006 – மட்டக்களப்பு மாவட்டத் துணைத் தளபதி கேணல் ரமணன் நினைவு நாள்.