ஊரடங்கு காலத்தில் உணவுக்கு கூட வழி இல்லாமல் திருநங்கைகள் கஷ்டப்படுவதை அறிந்து அவர்களுக்கு பண உதவி செய்த நடிகை மஞ்சு வாரியரும் பலர் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

முன்னணி நடிகை

மலையாள திரையுலகின் முன்னணி நடிகையான மஞ்சு வாரியர், நடிகர் திலீப்புடன் விவாகரத்து பெற்ற பின் மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கினார். மீண்டும் நடிக்க வந்தப் பிறகு அவரது படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. ‘அசுரன்’ படம் மூலம் தமிழிலும் அறிமுகமான அவர், மோகன்லாலுடன் நடித்துள்ள ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ என்ற படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது.

தமிழில் குவியும் வாய்ப்பு

ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடிக்கும் மஞ்சு வாரியருக்கு, தமிழில் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்த நிலையில், ஊரடங்கு காலத்தில் வருவாயின்றி தவிக்கும் திரையுலக தொழிலாளர்களுக்கு அவர் நிதியுதவி அளித்து உதவிக்கரம் நீட்டினர்.

ரசிகர்கள் பாராட்டு

திருநங்கைகள் சிலர் பணமில்லாமல் உணவுக்கு கூட தவிப்பதாக நடிகை மஞ்சு வாரியருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை அறிந்த அவர், மிகுந்த வேதனை அடைந்ததுடன் உடனடியாக 35 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்து உதவியுள்ளார். இந்த தகவலை அறிந்த அவரது ரசிகர்கள் உங்களுக்கு தாராள மனசு என்று பாராட்டி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here