விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ படத்தின் டிரெய்லர் மரண மாஸாக இருப்பதாக அப்படத்தில் நடித்த நடிகர் அர்ஜூன் தாஸ் தெரிவித்துள்ளார்.

‘மாஸ்டர்’
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘மாஸ்டர்’. இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாகவும், விஜய் கல்லூரி பேராசிரியராகவும் நடித்துள்ளனர். மேலும் மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ஷாந்தனு, ஸ்ரீமண் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ரிலீஸ்?
கடந்த ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆக வேண்டிய ‘மாஸ்டர்’ திரைப்படம் கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளிப்போயுள்ளது. வருகிற ஜூன் 22ந் தேதி நடிகர் விஜய்யின் பிறந்த நாள் அன்று ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
மரண மாஸ்
இந்த நிலையில், இன்ஸ்டாகிராம் நேரலை ஒன்றில் பேசிய மாஸ்டர் படத்தின் நடிகர் அர்ஜூன் தாஸ், ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் டிரெய்லர் மரண மாஸாக உள்ளது என்றார். இதுவரை 6 முறை டிரெய்லரை பார்த்ததாகவும், அதில் விஜய் சார் பேசும் வசனம் ஒன்று அட்டகாசமாக உள்ளது எனவும் கூறியுள்ளார். 
ரசிகர்கள் குஷி
‘மாஸ்டர்’ திரைப்படம் தியேட்டரில் ரிலீஸ் ஆன பிறகே ஓடிடி தளத்திற்கு வரும் என அர்ஜூன் தாஸ் உறுதிபட கூறினார். முதல் நாள் முதல் காட்சியை பார்க்க மிகவும் ஆவலாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே மாஸ்டர் படத்தின் அப்டேட்டுக்காக காத்திருந்த ரசிகர்கள் அர்ஜூன் தாஸின் இந்த தகவல் கேட்டு குஷி அடைந்துள்ளனர்.















































