நீலகிரி மாவட்டத்தின் சாலைகளில் காட்டு யானைகள் உலா வருவதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அச்சமடைந்துள்ளனர்.

ஊரடங்கு

கொரோனா ஊரடங்கு காரணமாக அத்தியாவசிய தேவைகள் இன்றி மக்கள் வெளியே வரவேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது. இதன்காரணமாக பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளதால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

வன விலங்குகள்

அடர்ந்த வனப்பகுதிகளை கொண்ட நீலகிரி மாவட்டத்தில் கொரோனா அச்சம் காரணமாக மக்கள் வெளியே வராததால், வன விலங்குகள் சர்வ சாதாரணமாக சாலைகளில் உலா வருகின்றன. யானை, சிறுத்தை, காட்டெருமை, கரடி போன்றவை சுற்றித்திரிவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

சாலையில் யானைகள்

இந்த நிலையில், மேட்டுப்பாளையம் – குன்னூர் சாலையில் காட்டு யானை ஒன்று குட்டியுடன் உலா வந்தது. இதனால் அப்பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். சாலையில் யானைகள் நடமாட்டம் உள்ளதால் வாகன ஓட்டிகள் மிகுந்த கவனத்துடன் செல்லுமாறு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here