சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடித்துள்ள ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் ரம்ஜான் பண்டிகையன்று ஓடிடி தளத்தில் ரிலீசாக உள்ளதாக கூறப்படுகிறது.
‘பொன்மகள் வந்தாள்’
சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் ஜோதிகா நடித்துள்ள படம் ‘பொன்மகள் வந்தாள்’. அறிமுக இயக்குனர் ஜெ.ஜெ.பெட்ரிக் இயக்கி உள்ள இந்தப் படத்தில், பாக்யராஜ், பாண்டியராஜன், பார்த்திபன், பிரதாப் போத்தன், தியாகராஜன் உள்ளிடோர் நடித்துள்ளனர். 
வெளியீட்டு பணி மும்முரம்
‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. ரூ.4.5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படத்தை பிரபல ஓடிடி நிறுவனத்திற்கு பல மடங்கு லாபத்தில் விற்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை ஓடிடி-யில் ரிலீஸ் செய்ய தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும், இதன் வெளியீட்டு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
ஓடிடியில் ரிலீஸ்?
அந்த வகையில் இப்படத்தை ரம்ஜான் விடுமுறையில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதன்படி ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் வருகிற மே 25-ந் தேதி ரிலீசாக உள்ளதாக கூறப்படுகிறது.















































