காவல்துறை தன்னை கைது செய்ததாக வெளியான செய்தி உண்மையில்லை என பிரபல கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே மறுப்பு தெரிவித்துள்ளார்.

கைது?

சமூக வலைதளங்களில் அடிக்கடி சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிட்டு வருபவர் நடிகை பூனம் பாண்டே. இவர் கொரோனா ஊரடங்கின் போது தனது காதலருடன் எந்த ஒரு காரணமும் இன்றி சொகுசு காரில் மும்பை நகரில் உள்ள மெரைன் டிரைவ் பகுதியில் வலம் வந்ததாகவும், அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்ததாகவும் செய்திகள் வெளியானது.

திரையுலகில் பரபரப்பு

சட்டத்தை மதிக்காதது, கொரோனா தொற்று பரவ காரணமாக இருந்தது போன்ற பல்வேறு பிரிவுகளின் கீழ் பூனம் பாண்டே மீது வழக்கு தொடரப்பட்டதாகவும் கூறப்பட்டது. இது மும்பை பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மறுப்பு

இந்த நிலையில், ஊரடங்கில் ஊர் சுற்றியதால், தான் கைது செய்யப்பட்டதாக வெளியான தகவல் உண்மை இல்லை என நடிகை பூனம் பாண்டே மறுப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள அவர், நேற்று இரவு திரைப்பட மராத்தான் படம் பார்த்துக் கொண்டிருந்தேன். நான் மூன்று திரைப்படங்களை ஒன்றன் பின் ஒன்றாக பார்த்துக் கொண்டிருந்தேன். அது வேடிக்கையாக இருந்தது.

வீட்டில் தான் இருக்கிறேன்

நான் கைது செய்யப்பட்டதாக எனக்கு நேற்றிரவு முதல் நண்பர்களிடம் இருந்து அழைப்பு வருகிறது. அதை நான் செய்திகளிலும் பார்த்தேன். நண்பர்களே, தயவுசெய்து என்னைப் பற்றி எழுத வேண்டாம். நான் வீட்டில் தான் இருக்கிறேன், நான் நன்றாக இருக்கிறேன். உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன் என அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here