சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துவரும் ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
‘அண்ணாத்த’
தர்பார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் தற்போது சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, பிரகாஷ் ராஜ், சதீஷ், சூரி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கிராமத்து பின்னணியில் விவசாய கதையம்சம் உள்ள படமாக ‘அண்ணாத்த’ திரைப்படம் தயாராகி வருகிறது. 
படப்பிடிப்பு ரத்து
‘அண்ணாத்த’ திரைப்படம் அக்டோபர் மாதம் ரிலீசாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக படப்பிடிப்பு நடத்தப்படாததால், ரிலீஸ் தள்ளிப்போனது.
ரிலீஸ் தேதி அறிவிப்பு
இந்த நிலையில், ‘அண்ணாத்த’ திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ரஜினியின் பேட்ட, தர்பார் படங்கள் பொங்கல் தினத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
 
                