தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், காவல்துறையினர் என அனைவரும் தங்களது உயிரை பணயம் வைத்து பணியாற்றி வருகின்றனர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் காவலர்களுக்கும் கொரோனா பரவி வருகிறது. 

நேரில் பாராட்டு

கொரோனா தடுப்பு பணிகளில் திறம்பட செயல்பட்டு வரும் காவலர்களை நகைச்சுவை நடிகர் சூரி நேரில் சென்று பாராட்டினார். சென்னை திருவல்லிக்கேணி காவல்நிலையத்துக்கு சென்ற சூரி, அங்கு போலீசாரிடம் ஆட்டோகிராப் வாங்கி நெகிழ வைத்தார்.

தன்னலமற்ற பணி

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சூரி, உலகத்தையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா எனும் கொடூரமான வைரஸ் பரவாமல் இருக்க, மக்களை வீட்டுக்குள்ளேயே இருக்க சொல்லிவிட்டு, இரவு பகல் பாராமல், தன்னுடைய குடும்பத்தை பிரிந்து, உயிரை பணயம் வைத்து காவல்துறையினர் வேலை செய்து வருகிறார்கள்.

காக்கும் கடவுள்

நடமாடும் தெய்வமாக, காக்கி சட்டை போட்ட அய்யனாராக காவல்துறையினர் நம்மை பாதுகாத்து வருகிறார்கள். தன்னலமின்றி செயல்படும் இவர்கள் தான் ரியல் ஹீரோ என சூரி தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here