சுத்தானந்த பாரதியார் பிறந்த தினம்
ஜடாதரய்யர் – காமாட்சி தம்பதியின் நான்காவது மகனாக 1897-ம் ஆண்டு மே 11ல் தமிழ்நாடு சிவகங்கையில் சுத்தானந்தர் பிறந்தார். அவரின் இயற்பெயர் வேங்கட சுப்பிரமணியன். ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தபோதுதான் ‘பாரத சக்தி’ எனும் மகா காவியத்தைப் பாடத் துவங்கினார். இவர் இயற்றிய நூல்களில் யோகசித்தி, கீர்த்தனாஞ்சலி, மேளராகமாலை ஆகிய கவிதை நூல்கள் பிரபலமானவை. தமிழின் வரலாற்றில் சிறப்பாக தொண்டாற்றிய இவர், தமது தொண்ணூற்று இரண்டாம் அகவையில் காலமானார்.
திருக்குறளை அதே ஈரடிகளில், அதே நடை, சந்தத்தில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் சுத்தானந்த பாரதியார். 1968 ஆம் நடந்த உலகத் தமிழ் மாநாட்டில், அப்புத்தகம் திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த பதிப்பு கழகத்தாரால் வெளியிடப்பட்டது.
1984 தமிழக அரசும், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகமும் நிறுவிய முதல் ராஜராஜன் விருதைப் பெற்றார் கவியோகி சுத்தானந்த பாரதி. அவர் எழுதிய ஆயிரக்கணக்கான நூல்களில், “பாரத சக்தி மகா காவியம்” அவர், சுதந்திரம் கிடைக்கும் வரை பாண்டிச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் ஏறத்தாழ 20 ஆண்டுகள் மவுன விரதம் காத்தபோது மனதில் தோன்றிய காவியம் ஆகும்.
சோவியத் கீதாஞ்சலி என்னும் நூல் சோவியத் ஒன்றியத்தின் சோவியத் நாடு நேரு நினைவுப் பரிசு பெற்றது.
நிகழ்வுகள்
1812 – லண்டனில் நாடாளுமன்றத்தில் வைத்து பிரதமர் ஸ்பென்சர் பேர்சிவல் ஜோன் பெல்லிங்ஹம் என்பவனால் கொல்லப்பட்டார்.
1857 – இந்தியப் புரட்சியாளர்கள் டெல்லியை பிரித்தானியர்களிடம் இருந்து கைப்பற்றினர்.
1867 – லக்சம்பேர்க் விடுதலை அடைந்தது.
1891 – ஜப்பானில் பயணம் மேற்கொண்டிருந்த ரஷ்ய மன்னர் இரண்டாம் நிக்கலாஸ் கொலை முயற்சி ஒன்றில் இருந்து தப்பினார்.
1905 – அல்பேர்ட் ஐன்ஸ்டீன் பிரௌனியன் இயக்கம் பற்றிய தனது விளக்கத்தை வெளியிட்டார்.
1924 – மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் காட்லீப் டைம்லர், கார்ல் பென்ஸ் ஆகியோரினால் ஆரம்பிக்கப்பட்டது.
1943 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கப் படைகள் அலூசியன் தீவுகளின் அட்டு தீவைக் கைப்பற்றினர்.
1949 – சியாம் நாடு தாய்லாந்து எனப்பெயர் மாற்றம் பெற்றது.
1949 – ஐக்கிய நாடுகள் அவையில் இஸ்ரேல் இணைந்தது
1953 – டெக்சாசில் இடம்பெற்ற சூறாவளியில் 114 பேர் உயிரிழந்தனர்.
1960 – முதலாவது கருத்தடை மாத்திரை அறிமுகமானது.
1985 – இங்கிலாந்தில் கால்பந்து போட்டியொன்றில் அரங்கில் இடம்பெற்ற தீயினால் 56 பார்வையாளர்கள் கொல்லப்பட்டனர்.
1987 – முதலாவது இதய மாற்றுச் சத்திர சிகிச்சை மேரிலாந்தில் நடத்தப்பட்டது.
1997 – ஐபிஎம் இன் ஆழ் நீலக் கணினி முதன் முதலாக காரி காஸ்பரவை சதுரங்க ஆட்டத்தில் தோற்கடித்தது.