எனது முகத்துக்கும், உடற்கட்டுக்கும் கவர்ச்சி வேடங்கள் செட் ஆகாது என்பதால், ஒருபோதும் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என இளம் நடிகை பிரியா பவானி சங்கர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இளம் நடிகை
தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் பிரியா பவானி சங்கரும் ஒருவர். ‘மேயாத மான்’ திரைப்படம் மூலம் திரையுலகில் கால் பதித்த அவர், தொடர்ந்து எஸ்.ஜே. சூர்யாவுடன் ‘மான்ஸ்டர்’, அருண் விஜய்யுடன் ‘மாபியா’ ஆகிய படங்களில் நடித்தார்.
 
புதுப்படங்கள்
தற்போது ‘இந்தியன்-2’ படத்தில் நடித்து வருகிறார். அடுத்து, விஷாலுக்கு ஜோடியாக ஒரு படத்திலும், ராகவா லாரன்ஸூக்கு ஜோடியாக இன்னொரு படத்திலும், ஹரீஸ் கல்யாணுக்கு ஜோடியாக மற்றொரு படத்திலும் நடிக்க இருக்கிறார். மீண்டும் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக, ‘பொம்மை’ என்ற படத்தில் நடிக்கிறார்.
கவர்ச்சி செட் ஆகாது
கவர்ச்சியாக நடித்தால்தான் சினிமா துறையில் முன்னணி கதாநாயகியாக காலம் தள்ள முடியும் என அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த பிரியா பவானி சங்கர், என் முகத்துக்கும், உடற்கட்டுக்கும் கவர்ச்சி வேடங்கள் செட் ஆகாது. அதனால் ஒருபோதும் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன். கவர்ச்சியான கதாபாத்திரங்களை கொண்ட சில புதிய பட வாய்ப்புகள் எனக்கு வந்தன. ஆனால், நடிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டேன் எனக் கூறியுள்ளார்.
 
                














































