கொரோனா ஊரடங்கு காலத்தில் மலையாள நடிகை மஞ்சு வாரியர் செய்த செயலை கண்டு ஆச்சரியமடைந்த பிரபல நடிகை ‘சேச்சி அற்புதம்’ எனக் கூறி அவரை பாராட்டியுள்ளார்.
முன்னணி நடிகை
மலையாள திரையுலகின் முன்னணி நடிகையான மஞ்சு வாரியர், நடிகர் திலீப்புடன் விவாகரத்து பெற்ற பின் மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கினார். மீண்டும் நடிக்க வந்தப் பிறகு அவரது படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. ‘அசுரன்’ படம் மூலம் தமிழிலும் அறிமுகமான அவர், மோகன்லாலுடன் நடித்துள்ள ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ என்ற படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது.

வீணை வாசிப்பு
கொரோனா ஊரடங்கு காலத்தை பயனுள்ளதாக கழிக்க நினைத்த மஞ்சு வாரியர், வீணை வாசிக்கக் கற்றுள்ளார். வீணையை வாசிக்கும் வீடியோ ஒன்றை அவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இதற்கு, நீங்கள் கற்றுக்கொண்டிருக்கும் வரை தோல்வி அடைவதில்லை என்று கருத்தும் பதிவிட்டுள்ளார். 
திரையுலகினர் பாராட்டு
மஞ்சு வாரியரின் இந்த முயற்சிக்கு மலையாள நடிகர், நடிகைகள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ், ‘ஆ சேச்சி அற்புதம்’ எனக் கூறியுள்ளார். மேலும் நடிகர் ஜெயசூர்யா, நடிகை பானு உட்பட பலரும் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.















































