கன்னியாகுமரி அருகே ஓய்வுபெற்ற ஆசிரியரை காவலர் ஒருவர் தாக்கும் வீடியோ காட்சி இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 
ஓய்வுபெற்ற ஆசிரியர்
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பல்பநாபன்புதூர் பகுதியில் நலவாரிய திட்ட பணிக்காக ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவர், அவரது ஊர் மக்களின் விண்ணப்பத்தை சரி பார்த்துக் கொண்டிருந்தார்.
தாக்கும் காவலர்
அப்போது அங்கு வந்த போலீசார், அந்த ஆசிரியரிடம் ஏதோ கேட்கின்றனர். இதற்கு அவர் அமர்ந்துகொண்டே பதிலளித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காவலர் ஒருவர், “போலீஸ் கேள்வி கேட்டா உட்கார்ந்துட்டே பதில் சொல்லுவியா” என கேட்டு அந்த ஆசிரியரை சரமாரியாக தாக்கினார். மேலும் ஆசிரியர் என்றும் பாராமல் தகாத வார்த்தைகளால் அவரை திட்டித் தீர்த்தார்.

கடும் கண்டனம்
ஓய்வுபெற்ற ஆசிரியரை காவலர் தாக்கிய அந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் தற்போது பரவி வருகிறது. இதற்கு பலரும் எதிர்ப்புகளையும், கண்டனங்களையும் தெரிவித்து வரும் நிலையில், சம்மந்தப்பட்ட காவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.















































