மாடர்ன் டிரஸிலேயே வலம் வந்த நடிகை ஷெரின் தற்போது உடல் முழுவதும் புடவையை சுற்றியபடி எடுத்துள்ள புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

ஷெரின்

செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ‘துள்ளுவதோ இளமை’ திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகான நடிகை ஷெரின், பின்னர் ஜெயா, ஸ்டூடண்ட் நம்பர் ஒன், விசில், நண்பேன்டா உள்ளிட்ட படங்களில் நடித்தார். மேலும் மலையாளம், தெலுங்கு, கன்னடப் படங்களிலும் அவர் நடித்துள்ளார்.

பிக் பாஸ் புகழ்

பின்னர் சினிமா வாய்ப்புகள் குறைந்த நிலையில், விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஷெரின் பங்கேற்றார். சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும், அவரை பிரபலப்படுத்தியது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். பிக் பாஸில் பங்கேற்ற ஷெரினுக்கென தனி ரசிகர் கூட்டமே உள்ளது.

வாழ்த்து மழை

இந்நிலையில் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் ஷெரினிக்கு நண்பர்கள், திரைப் பிரபலங்கள் , ரசிகர்கள் என அனைவரும் வாழ்த்துக்கூறி வருகின்றனர். இதனால் மகிழ்ச்சி அடைந்த ஷெரின், தனது இன்ஸ்டாகிராமில் சேலை அணிந்து அழகிய புகைப்படங்களை வெளியிட்டு “கண்விழித்ததில் இருந்து ஏகப்பட்ட வாழ்த்துக்கள். உங்கள் அன்பால் திகைத்துபோயுள்ளேன். இந்த பிறந்தநாளை மறக்கமுடியாத நாளாக ஆக்கிய அனைவருக்கும் நன்றி என்று கூறி பதிவிட்டுள்ளார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here