பழம்பெரும் நடிகை விஜய நிர்மலாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது அதற்கு சிக்கல் வந்துள்ளது.
கீர்த்தி சுரேஷ்
தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் 200 படங்களுக்கு மேல் நடித்து, 44 படங்களை இயக்கவும் செய்தவர் மறைந்த பழம்பெரும் நடிகை விஜய நிர்மலா. இவரது வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க தெலுங்கு திரையுலகில் சிலர் திட்டமிட்டு வருகின்றனர். அதில் விஜய நிர்மலா கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. 
உருவானது சிக்கல்
கொரோனா ஊரடங்கு முடிந்ததும் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது. விஜய நிர்மலாவின் மகனும், தெலுங்கு நடிகருமான நரேஷ் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், எனது தாய் விஜய நிர்மலாவின் வாழ்க்கையை படமாக்க என்னிடம் அனுமதி பெற வேண்டும் என்றும் ஆனால் இந்த படத்தை தயாரிக்க நான் யாருக்கும் அனுமதி கொடுக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.
எதிர்ப்பு
சில ஆண்டுகளுக்கு முன்பு எனது தாயாரின் வாழ்க்கையை படமாக்க நான் திரைக்கதை எழுதினேன். அதற்கு எனது தாயாரும் உதவினார். அவர் மறைந்ததும் அந்த பணிகளை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டேன். ஆனாலும் விரைவில் அந்த திரைக்கதையை எழுதி முடிக்க திட்டமிட்டுள்ளேன் என நடிகர் நரேஷ் தெரிவித்துள்ளார்.















































