கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் மே 3-ந் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், பொதுமக்கள் டிவியை பார்த்தும், ஓடிடியில் திரைப்படங்களை பார்த்தும் பொழுதை கழித்து வருகின்றனர். படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், சினிமா நட்சத்திரங்கள் அனைவரும் உடற்பயிற்சி, யோகா, சமையல் என தங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்து, அதனை வீடியோவாக சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
அஞ்சலி வீடியோ
அந்த வரிசையில் நடிகை அஞ்சலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “ஜிம்முக்கு போகமுடியாத சூழ்நிலை இருப்பதால், வீட்டில் இருக்கும் கிச்சனை சுத்தம் செய்தாலே அது நல்ல உடற்பயிற்சி” எனக் குறிப்பிட்டு, தனது வீட்டு கிச்சனை சுத்தப்படுத்துகிறார்.
ரசிகர்கள் கேள்வி
ஆனால், ஏற்கனவே சுத்தமாக இருக்கும் கிச்சனை நீங்கள் மீண்டும் ஏன் சுத்தம் செய்கிறீர்கள் என நடிகை அஞ்சலிக்கு அவரது ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.