பெரும் போராட்டங்களுக்குப் பிறகு குஜராத் மகாரஷ்டிரா ஆகிய இரு மாநிலங்களும் உருவாக்கப்பட்ட தினம் இன்று தான் என்பது பலரும் அறியாத ஒன்றாகும்.

இந்தியா என்னும் நாட்டில்…

இந்தியா என்னும் நமது தேசத்தில் இன்று வரை 28 மாநிலங்களும், 9 யூனியன் பிரதேசங்களும் அடங்கிய ஒன்றியமாக இருந்து வருகிறது. ஆனால், சுதந்திரத்துக்கு முன்பு இத்தனை மாநிலங்கள் இல்லை. அவை, மாகாணங்களாகவும், மன்னராட்சிப் பகுதிகளாகவும் செயல்பட்டன.சுதந்திரம் அடைந்ததற்குப் பிறகு, அவை இந்தியாவுடன் சேர்க்கப்பட்டு இந்தியா என்ற நாடு மலர்ந்தது. ஒவ்வொரு மாநிலத்துக்கும் இப்படி ஒரு கதை அல்லது சேர்க்கப்பட்ட கதை ஒன்று இருந்து வருகிறது.

குஜராத் மகாரஷ்டிரா மக்கள் போராட்டம்

அந்த அடிப்படையில், 1956 ஆண்டு மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது இப்போது மும்பை என்று அழைக்கப்படும்  பம்பாய் மாநிலத்தில் மராத்தி,குஜராத்தி,கொங்கணி,கட்ச் ஆகிய மொழி பேசும் பலரும் இருந்தார்கள். அப்போது தான் தொடங்கியது இந்த பிரச்சினை.பம்பாய் மாநிலத்தை பிரியுங்கள் என மராத்தி பேசுவோர் ஒரு புறமும், குஜராத்தி பேசுவோர் மறு புறமும் போராட்டங்கள் தொடங்கினர். அந்தப் போராட்டங்களின் முடிவாக, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய இரு மாநிலங்களும் உருவான தினம் மே 1, 1960 என்பது வரலாறு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here