தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் “அம்மா உணவகம்” என்ற மலிவு விலை உணவக திட்டம் தொடங்கப்பட்டது. பொதுமக்களிடம் மிகப்பெரும் வரவேற்ப்பை பெற்ற இத்திட்டத்தால், ஏழை, எளிய மக்கள், கூலித் தொழிலாளர்கள் உட்பட பலர் குறைந்த கட்டணத்தில் பசியாரினர். தற்போது “அம்மா உணவகம்” திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
“அம்மா உணவகம்”
தமிழகத்தில் சென்னை மாநகரில் 407 அம்மா உணவகங்களும் மற்ற மாநகராட்சி பகுதிகளில் 247 அம்மா உணவகங்களும் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகங்களில் காலையில் இட்லி ரூ.1-க்கும், பொங்கல் ரூ.5க்கும் விற்கப்படுகிறது. மதியம் சாம்பார் சாதம், தயிர் சாதம், மல்லி சாதம் போன்ற சாத வகைகளும் மாலையில் சப்பாத்தியும் விற்கப்படுகிறது.
இலவச உணவு
மிகக்குறைந்த விலையில் விற்கப்படும் இந்த உணவு வகைகள் ஊரடங்கு நேரத்தில் பணத்தட்டுப்பாட்டால் சிரமப்படும் சாதாரண மக்களுக்கு கைகொடுத்து வருகிறது. இந்த நிலையில், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 407 அம்மா உணவகங்களிலும் ஊரடங்கு முடியும் வரை இலவசமாக உணவு வழங்கப்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.