சித்திரை மாதம் அமாவாசையை அடுத்த மூன்றாம் நாள் வரும் திதி “அட்சய திருதியை” தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. அன்றைய தினம் தங்கம் வாங்கினால் மேன்மேலும் தங்கத்தின் சேர்க்கை நமக்கு உண்டாகும் என்கின்ற நம்பிக்கை உள்ளது. உண்மையில், அட்சய திருதியை நாளில் தானங்கள் செய்யவேண்டும். இதைத்தான் சாஸ்திரங்கள் வலியுறுத்துகின்றன. மோர், இளநீர், குடிநீர் போன்றவற்றை இந்த தினத்தில் தானம் அளிப்பவர்கள் தங்களின் முன்ஜென்ம பாவங்கள் நீங்கி வாழ்வில் சிறப்பான முன்னேற்றம் காண பெறுவார்கள்.
அட்சய திருதி
அட்சய திருதியை தினத்தன்று சிறிதளவு வெள்ளி வாங்கினால் நவகிரகங்களில் சந்திர பகவானின் அருள் கிடைக்கும். சருமநோய்கள், மனக்குழப்பம், நிம்மதியின்மை போன்றவை நீங்கும். அட்சய திரிதியை நாளன்று 11 ஏழைகளுக்கு தயிர்சாதம் அன்னதானமாக அளிப்பதால் உங்களின் 11 தலைமுறைகள் உணவிற்கு கஷ்டப்படும் நிலை ஏற்படாமல் காக்கும்.