ஜோதிகா நடிப்பில் உருவான பொன்மகள் வந்தாள் திரைப்படம் OTT ரிலீசுக்கு முன்பே தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் லீக் ஆனது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘பொன்மகள் வந்தாள்’

சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் ஜோதிகா நடித்துள்ள படம் ‘பொன்மகள் வந்தாள்’. அறிமுக இயக்குனர் ஜெ.ஜெ.பெட்ரிக் இயக்கி உள்ள இந்தப் படத்தில், பாக்யராஜ், பாண்டியராஜன், பார்த்திபன், பிரதாப் போத்தன், தியாகராஜன் உள்ளிடோர் நடித்துள்ளனர்.

OTTயில் ரிலீஸ்

பொன்மகள் வந்தாள் திரைப்படம் நேரடியாக OTT தளத்தில் ரிலீஸ் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்கு தியேட்டர் உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துனர். இருப்பினும் பொன்மகள் வந்தாள் திரைப்படம் மே 29-ம் தேதி OTTயில் ரிலீஸ் செய்யப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

ஆன்லைனில் லீக்

29ம் தேதி சரியாக 12:00AM மணிக்கு படம் அமேசானில் ரிலீஸ் ஆகவிருந்தது. ஆனால் அதற்கு முன்பே தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் முழு படத்தையும் லீக் செய்துவிட்டது. அதனால் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே படம் ரிலீஸ் செய்ய வேண்டியதாகிவிட்டது. ஊரடங்கு காலத்தில் புதுப்படங்கள் எதுவும் வெளிவராமல் உள்ள நிலையில், OTTயில் வெளியான முதல் தமிழ் படமும் இப்படி பைரஸியால் அதிகம் பாதிப்பை சந்தித்துள்ளது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பாராட்டு

இதனிடையே, OTTயில் ரிலீஸ் ஆகியுள்ள பொன்மகள் வந்தாள் படத்தை பார்த்த பலரும் சமூக வலைத்தளங்களில் அதனை பாராட்டி பதிவிட்டு வருகின்றனர். படம் அதிகம் எமோஷ்னலாக இருந்ததாக இயக்குனர் பாண்டிராஜ் டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். ஜோதிகாவின் சிறப்பான நடிப்பு தான் முழு படத்தையும் தாங்கி நிற்பதாக ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் ட்விட் செய்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here