முந்தானை முடிச்சு படத்தின் ரீமேக்கில் நடிப்பது ஏன் என்பது குறித்து நடிகர் சசிகுமார் விளக்கமளித்துள்ளார்.
‘முந்தானை முடிச்சு’
பாக்யராஜ் இயக்கி நடித்த திரைப்படம் ‘முந்தானை முடிச்சு’. 1983ம் ஆண்டு வெளியான இந்தத் திரைப்படம் தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் மாபெரும் வெற்றி பெற்றது. இயக்குனர் பாக்யராஜின் படைப்புக்கு இப்படம் இன்னொரு மைல் கல் என்று சொல்லலாம்.
ரீமேக் செய்ய திட்டம்
37 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படத்தை ரீமேக் செய்ய நடிகர் சசிகுமார் மற்றும் பாக்யராஜ் ஆகியோர் திட்டமிட்டனர். இப்போதிருக்கும் காலகட்டத்திற்கு ஏற்றவாறு இந்த படத்தை ரீமேக் செய்ய முடிவெடுத்து இருக்கும் பாக்யராஜ், இதற்காக நடிகர் சசிகுமாருடன் கைகோர்த்துள்ளார்.
இன்ப அதிர்ச்சி
ஜே.எஸ்.பி. ஸ்டுடியோஸ் நிறுவனம் மூலமாக ஜே.எஸ்.பி சதீஷ் இந்த ‘முந்தானை முடிச்சு’ ரீமேக் படத்தை தயாரிக்கிறார். பாக்யராஜ் மற்றும் சசிகுமார் இந்தப் படம் தொடர்பான பேச்சுவார்த்தையில் இருப்பது போன்ற ஒரு புகைப்படம் சமீபத்தில் வெளிவந்துள்ளது. ‘முந்தானை முடிச்சு’ படம் ரீமேக் செய்யப்படும் தகவல் அனைவருக்கும் ஒரு இன்ப அதிர்ச்சியாகவே உள்ளது.
உடனே ஓகே சொல்லிட்டார்
இதுகுறித்து பேசிய சசிகுமார், சின்ன வயசுல இருந்தே பாக்யராஜ் சாரின் படங்கள் பார்த்துப் பழகினவன் நான். அவரோட மூணு படங்கள் எப்பவும் எனக்கு ஆல்டைம் ஃபேவரிட். அதுல ஒண்ணு ‘முந்தானை முடிச்சு.’ முந்தானை முடிச்சு ரீமேக் தொடர்பா பாக்யராஜ் சாரை நேர்ல மீட் பண்ணிப் பேசினோம். அவரும் உடனே ஓகே சொல்லிட்டார்.
வாத்தியார் கேரக்டர்
‘முந்தானை முடிச்சு’ படத்தை அப்படியே ரீமேக் பண்றோம். அதனால, சார் பண்ணுன வாத்தியார் கேரக்டர்ல நான் நடிக்குறேன். இப்போ இருக்குற யங் ஜெனரேஷன் யாரும் இந்தப் படத்தைப் பார்த்து இருப்பாங்களானு தெரியல. அதனால, இப்போ இருக்குற பசங்களும் ரசிக்கிற மாதிரி படத்தை எடுக்க முடிவு பண்ணியிருக்கோம். தவிர இது ‘முந்தானை முடிச்சு’ ரீமேக்தான் பார்ட் 2 இல்லை. அதனால படத்தோட பேரும் ‘முந்தானை முடிச்சு’தான். இவ்வாறு சசிகுமார் கூறியுள்ளார்.