நடிகை ரித்திகா சிங் சினிமா பாடலுக்கு நடனம் ஆடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சிறப்பான நடிப்பு
சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடிப்பில் வெளியான திரைப்படம் “இறுதிச்சுற்று”. 2016 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ரித்திகா சிங். இறுதிச்சுற்று படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய ரித்திகா சிங், ஏராளமான விருதுகளை வென்றார். இதனைதொடர்ந்து சிவலிங்கா, ஆண்டவன் கட்டளை, ஓ மை கடவுளே உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். பின்னர் இந்தி, தெலுங்கு மொழிப் படங்களிலும் நடித்துள்ளார்.
வைரல் வீடியோ
பாக்ஸிங் சாம்பியனாக இருந்தாலும், நடிகையான பின்னர் தனது அட்டகாசமான ஸ்டைல் மற்றும் ஃபேஷன் லுக்கில் ரசிகர்களை கவரும் வகையில் அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டு வருகிறார் ரித்திகா சிங். அந்த வகையில் தற்போது இடுப்பை வளைத்து நெளித்து அட்டகாசமாக ஆட்டம் போட்டுள்ளார் ரித்திகா. அந்த ஆட்டத்தைப் பார்த்த ரசிகர்கள் பலர் கருத்துக்களை பதிவு செய்வதுடன், வீடியோவை பகிர்ந்தும் வருகின்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.