சென்னையில் மக்களின் வசதிக்காக 4 புதிய மின்சார ரயில் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
முக்கிய போக்குவரத்து
சென்னையில் வசித்து வரும் பொதுமக்களுக்கு மிக முக்கிய பொது போக்குவரத்து சேவையாக மின்சார ரயில் சேவை இருந்து வருகிறது. சென்னை கடற்கரை – தாம்பரம், சென்னை சென்ட்ரல் – திருவள்ளூர், தாம்பரம் – செங்கல்பட்டு, அரக்கோணம் – கும்மிடிப்பூண்டி ஆகிய வழித்தடங்களில் நாள்தோறும் 600க்கும் மேற்பட்ட மின்சார ரயில் சேவைகள் இயக்கப்படுகிறது. இந்த ரயில்களில் 10 லட்சம் பயணிகள் தினசரி பயணிக்கின்றனர். இந்த வழித்தடங்களில் பயணிகள் தேவை அடிப்படையில், அவ்வப்போது புதிய மின்சார ரயில் சேவைகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.
புதிய சேவை
அதன்படி, தற்போது 4 புதிய மின்சார ரயில் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சென்னை சென்ட்ரல் – ஆவடிக்கு முற்பகல் 11.15 மணிக்கும், ஆவடி – சென்ட்ரல் இடையே அதிகாலை 5.25 மணிக்கும், சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி இடையே இரவு 10.35 மணிக்கும், கும்மிடிப்பூண்டி – சென்ட்ரல் இடையே காலை 9.10 மணிக்கும் என 4 புதிய மின்சார ரயில் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.