நடிகர் நாகார்ஜுனா ஹைதராபாத் விமான நிலையத்தில் நடந்து சென்று கொண்டிருந்தபோது முதியவர் ஒருவர் அவரிடம் பேச பக்கத்தில் வந்தார். அப்போது பவுன்சர் அந்த முதியவரை தள்ளிவிட்டதில் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோ வைரலான நிலையில், அதனை பார்த்த நடிகர் நாகார்ஜுனா சம்மந்தப்பட்ட ரசிகரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். இதுதொடர்பாக தனது சமூக வலைதளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது; “இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கக்கூடாது. கீழே விழுந்த அந்த நபரிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இனிமேல் இதுபோன்று நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.















































