மக்கள் நீதி மய்யம் கட்சியின் 7ம் ஆண்டு விழா நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் கலந்துகொண்டார். அப்போது சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு முழுநேர அரசியல்வாதியாகப் போகிறேன் என நடிகர் விஜய் கூறியது பற்றி கமல்ஹாசனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவரோ, அது விஜய் இஷ்டம். அவர் செய்யும் சினிமா அவர் பாணி என்றார். தம்பி விஜய்யுடன் கூட்டணி வைப்பீர்களா என செய்தியாளர்கள் கேட்டதற்கு கமல் கூறியதாவது, நான் அவருடன் ஏற்கனவே பேசியிருக்கேன். அரசியலுக்கு வரணும்னு சொன்ன முதல் வரவேற்பு குரல் என்னுடைய குரல் தான் என்றார்.















































