‘குஷி’ திரைப்படம் தொடர்பாக கோவையில் நடிகர் விஜய் தேவரகொண்டா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில்; “காதல் கதை சார்ந்த படமாக உருவாகி உள்ளது ‘குஷி’ படம். நீ தானே பொன்வசந்தம் போன்ற படங்களை பார்த்துள்ளேன். சமந்தாவின் ரசிகன் நான். பாகுபலி, புஷ்பா, கே.ஜி.எஃப் போன்ற படங்கள் மிகப்பெரிய படங்கள். குடும்பங்களுடன் வந்து பார்க்கக்கூடிய படமாக குஷி படம் அமைந்துள்ளது. தமிழக மக்கள் கண்டிப்பாக குஷி படத்தில் வரக்கூடிய பாடல்களை ரசிப்பார்கள். ஸ்கிரிப்ட் இருந்தால் நிச்சயம் அடுத்தமுறை சமந்தாவுடன் இணைந்து நடிக்கத் தயாராக உள்ளேன். மாவீரன் படம் நேற்றைய தினம் பார்த்தேன். படம் மிகவும் பிடித்தது. தமிழில் சிவகார்த்திகேயன் எனக்கு மிகவும் பிடித்த நடிகர். லோகேஷ், நெல்சன் ஆகியோர் சிறந்த இயக்குநர்கள். வெற்றிமாறனின் அனைத்து படங்களும் எனக்கு பிடிக்கும். ஜெயிலர் படம் இன்னும் பார்க்கவில்லை. ஆனால் படத்தின் ரிவ்யூ நன்றாக உள்ளது”. ஈவ்வாறு விஜய் தேவரகொண்டா கூறினார்.