தனது உடல் எடை குறைந்ததற்கான காரணத்தை நடிகர் ரோபோ சங்கர் தெரிவித்திருக்கிறார்.
காமெடி நடிகர்
ஸ்டாண்ட் அப் காமெடியனாக தனது திரை பயணத்தை துவங்கிய ரோபோ சங்கர், விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். இதைதொடர்ந்து பல படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்ற ரோபோ சங்கர், காமெடியனாகவும், குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், மாரி, வேலைக்காரன், விஸ்வாசம், மிஸ்டர் லோக்கல், ஹீரோ, தி லெஜண்ட், கோப்ரா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அவரது மனைவி மற்றும் மகள் இந்திரஜா ஆகியோர் சின்னத்திரையில் பிஸியாக நடித்து வருகின்றனர்.
உடல்நிலை பாதிப்பு
இந்திரஜா சங்கர் அடிக்கடி தனது தந்தையுடன் நடனமாடி ரீல்ஸ் வீடியோக்களை ஷேர் செய்து வருவார். அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு அவர் வெளியிட்ட வீடியோவில் ரோபோ சங்கர் மிகவும் உடல் மெலிந்து இருப்பதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். படங்களில் நடிப்பதற்காக அவர் உடல் எடையை குறைத்தாரா? அல்லது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதா? என்று கேள்வி எழுப்பி வந்தனர்.
இதுதான் காரணம்
இந்த நிலையில், தனது உடல் மெலிந்து போனதற்கான காரணத்தை தற்போது ரோபோ சங்கர் கூறியுள்ளார். சமீபத்தில் அவர் பேட்டியில் கூறியிருப்பதாவது; “டயட்டில் இருந்தபோது எனக்கு மஞ்சள் காமாலை நோய் வந்தது. அதனால் தான் இப்படி எலும்பும் தோலுமாக மாறிவிட்டேன். மற்றபடி எந்த பிரச்சனையும் இல்லை. நான் திரும்பி வந்துவிட்டேன். புது தெம்புடன் இருக்கிறேன்” எனக் கூரியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “மஞ்சள் காமாலைனு ஈஸியாக எடுத்துக்காதீங்க, அதுவும் சீரியஸான பிரச்சனை தான், உடம்பை பார்த்துக்கோங்க” என அறிவுரை கூறி வருகின்றனர்.