கோலாகலமாக தொடங்கியுள்ள கேன்ஸ் திரைப்பட விழாவில் நடிகர், நடிகைகள் பலர் அசத்தல் உடையணிந்து பங்கேற்றுள்ளனர்.
பிரமாண்டமான வரவேற்பு
பிரான்ஸ் கேன்ஸ் நகரில் ஆண்டுதோறும் நடத்தப்படும் புகழ்பெற்ற திரைப்பட விழாவான கேன்ஸ் திரைப்பட விழா மே 17ஆம் தேதி தொடங்கி 27 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த விழாவில் பல முன்னணி நடிகர், நடிகைகளும் பங்கேற்று சிவப்பு கம்பளத்தை அலங்கரிப்பார்கள். இந்தியாவில் இருந்து அனுராக் காஷ்யப் இயக்கிய ‘கென்னடி’ படம் மிட்நைட் ஸ்கீரினிங் பிரிவிலும், ராகுல் ராய் நடித்த ‘ஆக்ரா’ படம் ஃபோர்ட்நைட் பிரிவிலும் மற்றும் மணிப்பூரில் 1990 ஆம் ஆண்டு வெளியான ‘இஷானோ’ படம் ப்ரஸ்டீஜியஸ் கேன்ஸ் கிளாசிக் பிரிவிலும் திரையிடப்படவுள்ளன.
ஏராளமான பிரபலங்கள்
இதில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், நடிகர் மாதவன், நடிகைகள் நயன்தாரா, பூஜா ஹெக்டே, தமன்னா, வாணி திரிபாதி, கிராமப்புற இசையமைப்பாளர் மற்றும் பாடகர் மாமே கான், இசையமைப்பாளர் ரிக்கி கேஜ், திரைப்பட தயாரிப்பாளர் சேகர் கபூர், திரைப்பட தணிக்கை வாரியத் தலைவர் பிரசூன் ஜோஷி உள்ளிட்டோர் பங்கேற்றுள்னர். மாதவனின் ‘ராக்கெட்ரி: தி நம்பி எபெக்ட்’ படம், இந்தியா சார்பில் திரையிடப்படுகிறது. மேலும் ‘தம்பு’ மலையாளப் படமும் திரையிடப்பட இருக்கிறது.
பாரம்பரியமான உடை
உலகெங்கிலும் உள்ள திரையுலக பிரபலங்கள் மற்றும் ஃபேஷன் சகோதரர்கள் திரைப்பட விழாவில் கலந்து கொண்டனர். இந்தியாவின் சார்பில் மத்திய செய்தி மற்றும் ஒலிரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், இணை அமைச்சர் முருகன் தலைமையிலான 11 பேர் கொண்ட குழு கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்றுள்ளனர். இதில் இணையமைச்சர் முருகன் பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டையில் கலந்து கொண்டார். இதுதொடர்பான போட்டோவை பகிர்ந்து, ”உலகப்புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் இன்று நடைபெற்ற சிவப்புக் கம்பள வரவேற்பில் தமிழ் பாரம்பரிய அடையாளமான வேஷ்டி சட்டை அணிந்து பங்கேற்பதில் ஒரு தமிழனாய் பெருமிதம் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.