தங்கலான் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் நடிகர் விக்ரமுக்கு விலா எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
பீரியட் படம்
விக்ரம் நடிப்பில், ஞானவேல் ராஜா ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தங்கலான். இந்த திரைப்படத்தில் பார்வதி மற்றும் மாளவிகா மோகனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். 3டி-யில் உருவாகி வரும் இந்த திரைப்படம், பதினெட்டாம் நூற்றாண்டில் கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் அடிமைகளாக இருந்ததை மையப்படுத்தி உருவாகி வருகிறது.
விபத்தில் சிக்கிய விக்ரம்
தங்கலான் படத்திற்காக அதிக உடல் எடை குறைத்து, தீவிர உடற்பயிற்சி செய்து இருக்கிறார் விக்ரம். சமீபத்தில் கூட விக்ரமின் புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. இந்த படத்திற்காக நடிகர் விக்ரம் சில பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார். அப்படி பயிற்சி செய்யும் போது எதிர்பாராத விதமாக விக்ரமுக்கு விலா எலும்பு முறிந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் விக்ரம், தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து காரணமாக தங்கலான் படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.