சினிமாத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் சம்பளம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் நடிகை மதுபாலா.
குறைவான சம்பளம்
தமிழில் அழகன் என்ற படத்தில் நடித்ததன் மூலம் சினிமா துறைக்கு அறிமுகமானவர் நடிகை மதுபாலா. அந்த படத்திற்கு பிறகு ஹிந்தி, மலையாள மொழிகளில் நடிப்பதில் கவனம் செலுத்தி வந்த மதுபாலா, ரோஜா படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் திரும்பி பார்க்க வைத்தார். அதன்பிறகு ஜென்டில்மேன், செந்தமிழ்ச்செல்வன், மிஸ்டர் ரோமியோ, பாஞ்சாலங்குறிச்சி உள்ளிட்ட படங்களில் லீட் ரோலில் நடித்தார். 90களில் நடிக்க துவங்கிய நடிகை மதுபாலா, ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று பல மொழிகளிலும் நடித்துள்ளார். கடைசியாக இவர் தமிழில் தேஜாவு என்ற படத்தில் நடித்திருந்தார். முன்னணி நடிகையாக இருக்கும் பொழுதே திருமணம் செய்துகொண்ட மது, சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் சினிமாத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் சம்பளம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
இணையான சம்பளம்
இதுதொடர்பாக மதுபாலா பேசியதாவது; “நான் சினிமாவில் நடிக்க துவங்கிய காலகட்டத்தில் ஹீரோக்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் இருக்கும். அதேபோல் அவர்களுக்கு மட்டுமே அதிக சம்பளம் கொடுப்பார்கள். ஆனால் இப்போது அப்படி இல்லை பெண்களும் கதைக்கு ஏற்றவாறு முக்கியத்துவத்துடன் நடிக்கிறார்கள். அதனால் கதாநாயகிகளுக்கும் நடிகர்களுக்கு இணையான சம்பளம் கொடுக்கப்பட வேண்டும்” என கூறியுள்ளார்.