கேரள சட்டப்பேரவை வளாகத்தில் போராட்டில் ஈடுபட்ட எதிர்கட்சி எம்எல்ஏக்களை காவல்துறையினர் குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றினர்.
போராட்டம்
கேரள சட்டப்பேரவையில் பெண்கள் பாதுகாப்பு தொடர்பான ஒத்திவைப்பு தீர்மானத்தை சபாநாயகர் ஏற்க மறுத்ததை கண்டித்து எதிர்கட்சி எம்எல்ஏக்கள் இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். சபாநாயகர் அலுவலகம் எதிரே நடைபெற்ற இந்த போராட்டத்தின் போது சபாநாயகரை கண்டித்து அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
தள்ளுமுள்ளு
போராட்டத்தில் ஈடுபட்ட எம்எல்ஏக்களை கலைந்துசெல்லும்படி பாதுகாவலர்கள் வலியுறுத்தினர். ஆனால் அவர்கள் கேட்காததால், அனைவரையும் குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றினர். பாதுகாவலர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் எம்எல்ஏக்கள் முரண்டு பிடித்ததால் சிறிதுநேரம் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. இதில் சில எம்எல்ஏக்களுக்கு லேசான காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. எதிர்க்கட்சிகளின் ஜனநாயக உரிமைகள் தொடர்ந்து சட்டப்பேரவையில் மறுக்கப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சதீசன் குற்றம்சாட்டினார்.